#BREAKING : நடிகை ஊர்வசியின் சகோதரர் கமல் ராய் காலமானார்..!!
Updated: Jan 21, 2026, 18:39 IST1769000989591
திரைப்பட மற்றும் சீரியல் நடிகர் கமல் ராய் காலமானார். இவர் நடிகைகள் ஊர்வசி, கல்பனா மற்றும் கலரஞ்சினி ஆகியோரின் சகோதரர் ஆவார்.
பிரபல மலையாள நடிகரும், நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பு காரணமாக இன்று (ஜன.21) சென்னையில் காலமானார்.
இவர் சாயுஜ்யம், கொல்லிலகம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகந்திகம், வாசலம், ஷோபனம், தி கிங் மேக்கர், லீடர் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தார். மேலும், தமிழில் 'புதுசா படிக்கிறேன் பாட்டு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஷோபனம், தி கிங் மேக்கர், லீடர் போன்ற படங்களிலும், நடிகை வினயா பிரசாத் நடித்த 'சாரதா' போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


