நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல்- வீடியோ வெளியீடு
சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார்.இதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர் . இந்நிலையில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்று பெங்களூரு திரும்பினார். ஆனால் தன்னை விஜயலட்சுமி நிறைய பொய் சொல்வதாகவும், 2010-க்கு பிறகு அவரிடம் நான் பேசியதே இல்லை என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.
சீமான் மானநஷ்ட வழக்கு நடத்தினால் நான் என் அக்காவை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் - விஜயலட்சுமி
— மாறன் பாண்டியன் (@maaran_pandi) September 17, 2023
அண்ணன் சீமான் வழக்கு நடத்துவதில் உறுதியாக உள்ளார்... வந்து அவதூறு பரப்பிவிட்டு போனால் அப்படியே விட்டுவிட முடியாது...
ஏதோ பணம் கொடுத்து சீமான் சமாதானம் ஆக்கிட்டார்னு… pic.twitter.com/UqdMou8l6h
இந்நிலையில் இந்த விவகாரத்தை இப்படியே மன்னித்து விட்டுவிட்டால் ஒன்றுமில்லை. சீமான் மானநஷ்ட வழக்கு நடத்தினால் நான் என் அக்காவை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்வேன் என நடிகை விஜயலட்சுமி வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது தற்கொலைக்கு யார் காரணம் என்றும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிடுவேன் எனக் கூறியுள்ளார்.