"திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள்" - நடிகை விந்தியா காரசார பேச்சு!
அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று முன்தினம் வேன் பிரசாரம் செய்தார்.
அதில், அவர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சி முடியும் போது மக்கள் வெறுப்பாக இருப்பது வழக்கம். ஆனால், இம்முறை, மக்கள் மட்டுமல்ல; தி.மு.க. வினரே வெறுப்பில் உள்ளனர். அந்த கட்சிக்காரங்களே ஓட்டு போட மாட்டாங்க. தி.மு.க.வில் இருப்பவர்களுக்கு 'சீட்' இல்லை. ஆனால், அ.தி.மு.க. வில் இருந்து தி.மு.க. வுக்கு சென்ற, 19 பேருக்கு 'சீட்' கொடுத்துள்ளனர். கட்சியில் சேர்ந்து இரண்டு மாதம் கூட ஆகாத, ஐந்து பேருக்கு 'சீட்' வழங்கினர்.
தி.மு.க.வினர் வாழ்க்கையில் மைனஸ் மட்டும் தான் இருக்கும். தி.மு.க.வினரே, தி.மு.க.வை தோற்கடிப்பார்கள். அவர்கள் தோற்க அடிக்க விட்டாலும், மக்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். கடந்த, ஐந்து ஆண்டாக மக்களுக்கு ஒன்றும் செய்யாமல், விளம்பரம் தேடி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுகின்றனர். இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.



