25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

 
25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை ஏற்கனவே தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில், 25 தொகுதிகளுக்கு கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதன்படி 2 முதல் 4 பேர் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாசில்தார், சிறப்பு தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே 31 தொகுதிகளுக்கு கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.