கலாஷேத்ரா விவகாரம்...மாணவிகள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை - கூடுதல் காவல் ஆணையர்

 
prem anand

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரத்தில் மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் அளித்தால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிம்ஹா தெரிவித்துள்ளார். 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக  மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விகாரம் தொடர்பாக  டிஜிபி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை வாபஸ் பெற்று,  தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரகசியமாக மூன்று மணி நேரம் விசாரணை நடத்திச் சென்றிருக்கிறார் .  ஆனாலும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டே விசாரணை நடத்தியதால் தங்களால் வெளிப்படையாக பேச முடியவில்லை என மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள்  நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவிகள் அமைப்பு  மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.  அந்த கடிதத்தில், பாலியல் தொல்லை அளித்துவரும் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துண்புறுத்தல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிம்ஹா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார். மேலும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வராததால், போலீஸ் விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மாணவிகள் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் அளித்தால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.