தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.. கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நடவடிக்கை..

 
தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.. கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நடவடிக்கை..

கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய  விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வரும் பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இதுபோன்ற தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்க
ள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
இதைத்தொடர்ந்து, விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்த  ஏஎஸ்பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்த புகார் தொடர்பாக  விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியருக்கு ,  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.. கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நடவடிக்கை..

இதற்கிடையே , ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தது.  புகார் தொடர்பாக தேசிய  மனித உரிமைகள் ஆணையமும், மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர்  முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து  தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.