சென்னை - நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரயில் சேவை

 
Vande bharat

சென்னை- நெல்லை இடையே வராந்திர கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 

வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும் வகையிலும் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்

இந்நிலையில் நவம்பர் 16 முதல் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 2.15-க்கு நெல்லை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.