டெல்லியில் ஆதவ் அர்ஜூனா முகாம்- காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு

 
aadhav aadhav

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

aadhav

தவெகவின் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள காங்கிரசை தவெக நாடியுள்ளதாகவும், காங். முக்கிய தலைவர்களை ஆதவ் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மூலம் திமுக அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக பக்கம் சென்றால் தேர்தல் அரசியலில் பின்னடைவு என விஜய் எண்ணுவதால் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சிலரையும் ஆதவ் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.