இனி எந்தவொரு பிளவுவாத வன்முறைகளுக்கும் வழிவிட மாட்டோம் - ஆதவ் அர்ஜுனா
இனி எந்தவொரு பிளவுவாத வன்முறைகளுக்கும் வழிவிட மாட்டோம் என்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில் உறுதிக் கொள்வோம் என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தோழர்களே, உங்களுக்குச் சரியான தலைவர் அம்பேத்கர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மதவாத சக்திகளால் உங்கள் மீது சுமத்தப்பட்ட அடக்குமுறைகளிலிருந்து உங்கள் அனைவரையும் மீட்க அவரால் மட்டுமே முடியும்' என்று நமக்கு அறிவுறுத்தினார் தந்தை பெரியார். மேலும், 'புத்தருக்குப் பிறகு இந்திய நிலத்தில் தோன்றிய மாபெரும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்' என்றார். மத பெரும்பான்மைவாதம் மற்றும் சாதிய அடக்குமுறை என்ற வன்முறை கற்களுக்கு எதிரான தகர்க்க முடியாத 'நடுகல்' பாபாசாஹேப் அம்பேத்கர்.
'தோழர்களே, உங்களுக்குச் சரியான தலைவர் அம்பேத்கர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மதவாத சக்திகளால் உங்கள் மீது சுமத்தப்பட்ட அடக்குமுறைகளிலிருந்து உங்கள் அனைவரையும் மீட்க அவரால் மட்டுமே முடியும்' என்று நமக்கு அறிவுறுத்தினார் தந்தை பெரியார். மேலும், 'புத்தருக்குப் பிறகு இந்திய… pic.twitter.com/V6beB2XmCq
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 6, 2024
'எல்லோரும் சமம்' என்ற நிலைப்பாடு மீது வெறுப்பைக் கொண்டுள்ள பிளவாத சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கும் ஒரே அரண் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்.' அவர் கைகள் காட்டும் பாதையில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம், இனி எந்தவொரு பிளவுவாத வன்முறைகளுக்கும் வழிவிட மாட்டோம் என்று இந்நாளில் உறுதிக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.


