முதல்வருக்கு வெள்ளி செங்கோல் பரிசளித்த ஆதீனம்..!

 
1 1
கடலூரில் நேற்று(ஏப்ரல் 6) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை நேரில் சந்தித்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து, வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கினார்.