மதிமுக கழக செயலாளராக துரை வைகோ போட்டியின்றி தேர்வு !!

 
tn

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

tn

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் என்று 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். மதிமுகவிற்காக எந்த  உழைப்பும் , தியாகமும் செய்யாத துரை  வைகோவிற்கு பொறுப்பு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.  இதனால் தலைமை கழகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

durai vaiko

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் கட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மதிமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில்  பொதுக்குழு இன்று கூடியது. திமுகவுடன் மதிமுகவை இணைக்க 3 பேரும் வலியுறுத்தினர். இதனால்  கட்சிக்கு எதிராகக் கருத்து கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வைகோவுக்கு அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தலைமை கழக செயலாளராக துரை வைகோவை நியமிக்கவும் பொது குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த நிலையில்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.