"விஜயை கட்சி தொடங்க சொன்னதே இவருதான்”- அதிமுக செயலாளர் பரபரப்பு பேட்டி

 
விஜய் விஜய்

முதல்வர் ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக, மத்திய அரசை விமர்சனம் செய்து விட்டு சென்று இருப்பதாகவும், விஜய் கட்சி தொடங்கி சொல்லியதே, முதல்வர் ரங்கசாமி தான் என்றும் அதிமுக செயலாளர் அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரி: அமைச்சரவை மாற்றத்தில் சாதி பரிமாணத்தை கொண்டு வந்ததற்காக  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை அதிமுக தாக்கியது - தி இந்து


புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செயலாளர் அன்பழகன், “தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் இல்லை, மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணங்களுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. ஆனால் இது சம்பந்தமாக விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விஜய் பேசியதில் அவருக்கு புரிதல் இல்லை என்பதையே கட்டுகிறது. முதலமைச்சர் ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விமர்சனம் செய்து விட்டு சென்று இருப்பதாக தெரிவித்தார். விஜய் கட்சி தொடங்க சொல்லியதே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தான். அப்படி இருக்க போதும், புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல. 

டிட்வா புயல் காரணமாக பல தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. எனவே பொங்கல் தொகுப்பாக ரூபாய் 5000 வழங்க வேண்டும். போலி மருந்து விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது, காங்கிரஸ் என்ன காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் உண்மையானதா அல்லது போலியான கண்டறிய வேண்டும், இது சம்பந்தமாக புதுச்சேரி அரசு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.