திமுக அரசை கண்டித்து குன்றத்தூரில் வருகிற 09ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!
குன்றத்தூரில் திமுக அரசை கண்டித்து வருகிற 09ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும்; ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத, கடுமையாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத, மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்,
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்தாத, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 9.1.2025-வியாழக் கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளா


