ADMK CANDIDATE LIST இன்று வெளியாகும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

 
EPS EPS

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்தக் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று வெளியிட்டார்.
இதனிடையே இக்கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி அதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமியும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் நேற்று கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் எஞ்சியுள்ள தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.