“அதிமுகவில் ஒருத்தன் உயிரோட இருக்க மாட்டீங்க’... அருவாவோடு மிரட்டிய விஜய் ரசிகர்கள்- அதிமுக வழக்கறிஞர் புகார்

 
s

“அதிமுகவில் ஒருத்தன் உயிரோட இருக்க மாட்டீங்க, அருவாவோடு விஜய் ரசிகர்கள், வீடியோ படு வைரல்” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்டுள்ள யாத்திரிகன் யூடியூப் சேனல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக வழக்கறிஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர் பாலமுருகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கடந்த 24ஆம் தேதி யாத்ரிகன் மீடியா என்ற youtube சேனலில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் அதிமுகவில் ஒருத்தன் உயிரோட இருக்க மாட்டீங்க அருவாவோடு விஜய் ரசிகர்கள் வீடியோ படு வைரல் என்கிற தலைப்பில் இரண்டு நபர்கள் அறிவாலுடன் அதிமுக தொண்டர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் அவர்களையும் தகாத வார்த்தைகளால் தீட்டி கொலை மிரட்டல் விடுப்பது போன்று ஒரு காணொளியினை அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகைப்படத்துடன் இணைத்து வட சென்னை திரைப்படத்தின் பின்னணி இசையுடன் எடிட் செய்து வெளியிட்டுள்ளதாகவும், இரு வேறு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு சொந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடனும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு காணொளிகளும் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பதியப்பட்டதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பழைய வீடியோவினை வைத்து யாத்திரிகன் மீடியா சேர்ந்த நபர்கள் இரு பிரிவினர்களிடையே வன்முறை தூண்டும் வகையிலும் பொது அமைதியை விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடனும் வீடியோக்களை எடிட் செய்து தற்போது youtube facebook whatsapp twitter போன்ற சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இரு தரப்பினர் இடையே கலவரம் நடக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர் எனவும், இதில் நடிகர் விஜயின் கட்சியினர் மாநாடு நடத்த உள்ள நிலையில் இந்த வீடியோவினை இதுவரை 626 நபர்கள் பார்த்துள்ளதாகவும் 20 நபர்கள் லைக் செய்துள்ளதாகவும் 9 நபர்கள் கமெண்ட் செய்துள்ளதாகவும், இது தவிர யாத்திரிகன் நிர்வாகத்தின் இதர சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் எனவே காவல் ஆணையர் அதிமுக தொண்டர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தகாத வார்த்தைகளால் தீட்டி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் அவர்களின் புகைப்படத்துடன் இணைத்து எடிட் செய்து தீய நோக்கத்துடன் பதிவேற்றம் செய்துள்ள யாத்திரிகன் மீடியாவின் நிர்வாகத்தினரின் செயலின் காரணமாக நடக்க இருக்கின்ற வன்முறைகளை தடுக்க வேண்டி சட்டத்திற்கு புறம்பான காணொளியினை யாத்திரிகன் வீடியோவில் நிர்வாகத்தினரால் பதிவேற்றம் செய்யப்பட்டு நிலையில் அவைகளை நீக்க வேண்டும் . இந்த சம்பந்தமான நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

அந்த வீடியோவின் டிரான்ஸ் ஸ்கிரிப்ட் வடிவத்தையும் புகார் மனுவில் இணைத்துள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது யாத்ரிகன் மீடியாவில் நீல சட்டை அணிந்துள்ள நபர் பேசியதாவது, “அதிமுக காரங்களா... நீங்க எல்லாரும் உயிருடன் இருக்க மாட்டீங்க... உங்க உயிர்கள் எல்லாம் எங்கள் தளபதி கையில் தான் உள்ளது! போனா போச்சுன்னு விட்டு வச்சிருக்கோம் எங்க தளபதி ஆணையிட்டால் உங்க எல்லாரையும் வெட்டி சாய்த்து விடுவோம்” எனவும், வெள்ளை சட்டை அணிந்துள்ள நபர்  “ஊர்ல எல்லா டைம்ல சீன போட்டு இருக்கீங்களா.. இத்தோட எங்க அருவா தாண்டா பேசும்” எனவும் பேசியுள்ளனர்.