கஞ்சா விற்றதற்காக கைதான நபரை அதிமுக பிரமுகர் என்பதா? - அதிமுக கடும் கண்டனம்!

 
admk office

சன் நியூஸ் தொலைக்காட்சி, இனியும் இத்தகைய அவதூறுகளை தொடருமாயின், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என கட்சி தலைமை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் கஞ்சா விற்றதாக காட்டு ராஜா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், "அதிமுக பிரமுகர்" என்று பொய் செய்தி வெளியிட்டுள்ளது சன் நியுஸ் தொலைக்காட்சி. கைது செய்யப்பட்டுள்ள நபர் அஇஅதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. திமுகவைப் போன்று அயலக அணி மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலோ, அமைச்சரே தன் படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாகவோ இருந்திருந்தால் "அதிமுக பிரமுகர்" என செய்தி வெளியிட்டு இருக்கலாம். 

ஆனால், ஒரு நிகழ்ச்சியில் கூட்டத்தோடு கூட்டமாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்களுடன் பொதுவாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து ஆளும் விடியா திமுக சார்பான அரசியல் நோக்கத்துடன் அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள சன் நியூஸ் தொலைக்காட்சி, இனியும் இத்தகைய அவதூறுகளைத் தொடருமாயின், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.