அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ், இபிஎஸ்...

 
சேகர் ரெட்டியின் டைரி விவகாரம்; ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட 12 பேருக்கு சம்மன்!

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலையொட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்ரும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வேட்புமணு தாக்கல் செய்தனர்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன் மற்றும் முனைவர் சி.பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது ஏன்? – அதிமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்!

அதனையொட்டி, இன்று  சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில்  தற்போதைய கழக ஒருங்கிணைப்பாளர் , துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வரும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து  வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தல்… 6 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக!

இந்த மனுக்கள் நாளை (05.12.21) காலை 11.25 மணியளவில் பரிசீலனை செய்யப்படும். மேலும் தேர்தல் முடிவுகள் 08.12.2021 ( புதன்கிழமை) அன்று அறிவிக்கப்படும் .  இதனிடையே அரசியல் வட்டாரத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.