அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகாரப் பாவிகள்! அவர்களாலேயே நாம் தோற்றோம்- திண்டுக்கல் சீனிவாசன்
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள், அவர்கள் குடும்பத்தினரின் 80 லட்சம் வாக்குகளால் தான் நாம் தோற்றோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “கூட்டணி கட்சிகள் 100 கோடி ரூபாய் கேட்கிறார்கள் என்று தான் பேசியது உண்மைதான். கம்யூனிஸ்ட் கட்சியினர் உங்கள் ஊரில் இருக்கிறார்களா? திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினரே இல்லை சத்தமே கேட்கவில்லை
எடப்பாடி பழனிசாமி எங்களை கூப்பிட்டு பேசிவிட்டார் போகும் கூட்டங்களில் கூட்டணி குறித்து எதுவும் பேசி குழப்பிட வேண்டாம், மற்ற விஷயங்களை அமைதியாக நாங்கள் பேசிக்கிறோம். நல்லக்கூட்டணியை அமைத்திட அண்டர்ஸ்டான்டிங்கில், அண்டர்கிரவுண்ட் வேலை அருமையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கட்சியினரின் ஒருவருக்கு ஒருவர் பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. போன தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஒரு தபால் ஓட்டு கூட தனக்கு விழவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொலைகார பாவிகள். அவர்களின் குடும்பத்தினரின் 80 லட்சம் வாக்குகளால்தான் நாம் தோற்றோம்” என்றார்.