ஜனவரி முதல் 595 கொலை! சட்டம், ஒழுங்கு சீர்கேடு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 
EPS

அதிமுக முன்னாள்  அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் தந்தை ஆசிரியர் செல்லையா சொந்த ஊரான கடம்பூர் சிதம்பரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வால் கடந்த வியாழக்கிழமை அன்று மரணம் அடைந்தார். கடம்பூர் ராஜுவின் தந்தை செல்லையா ஆசிரியரின் இறுதிச் சடங்குகள் நேற்று முன்தினம் நடைபெற்றன 

Image

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  தந்தையார் மறைவுக்கு இல்லத்தில் சென்று இரங்கல் தெரிவித்தார். பின்னர் மறைந்த கடம்பூர் ராஜூ தந்தை ஆசிரியர் செல்லையாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.EPS

பின்னர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. அன்றாடம் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கொலை நடக்காத நாளே கிடையாது.  இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் இதுவரை 595 கொலைகள் நடந்துள்ளன. காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். பொதுமக்கள், அரசியல்வாதிகள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

பாஜக ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் திமுகவினர் அமைச்சரவையில் இருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவரே மத்தியில் நிதியமைச்சராக இருந்தார்.  மத்தியில் திமுக இருந்த போது எவ்வளவு நிதி வந்தது. மக்களை திசை திருப்பவே போராட்டம் என திமுக நாடகம் நடத்துகிறது. பாஜகவுடன் கூட்டணி என்பது இனி கிடையாது” என்றார்.