தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி?- எடப்பாடி பழனிசாமி

 
EPS

அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி எனக் கூறும் அண்ணாமலைக்கு அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது அது தெரியவில்லையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

eps

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவும், பாஜகவும் மறைமுகமாக உறவு வைத்துள்ளதை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசி உள்ளார். 10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார். அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி எனக் கூறும் அண்ணாமலைக்கு அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது அது தெரியவில்லையா? மத்திய அரசு நாணயம் வெளியிட்டதால்தான் எம்ஜியாருக்கே புகழ் கிடைத்தது என அண்ணாமலை பேசுவது தவறு. அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் குறித்து அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை.

பாஜகவின் தற்போதைய தலைவர் பிறக்கும் முன்னதாகவே எம்.ஜி.ஆர். முதலமைச்சராகிவிட்டார். கட்சியின் அடையாளத்தை வைத்து மத்தியில் ஆளுபவர்கள். எங்களின் தலைவருக்கு புகழ் சேர்க்க அவசியம் இல்லை. கூட்டணியில் மாநிலங்களவையில் பல மசோதாக்களை நிறைவேற்ற தேவை இருக்கும் போது, அதிமுக நல்ல கட்சியாக தெரிந்தது. கூட்டணி முறிந்த பிறகு கெட்ட கட்சியாக தெரிகிறது.

eps

தவெக பாடலில் அதிமுக தலைவர்களை பயன்படுத்தியிருப்பது பெருமையாக உள்ளது. அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால்தான் கட்சி தொடங்க முடியும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம்- அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார்.