கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை- எடப்பாடி பழனிசாமி

 
EPS

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் நிறைய அவதாரத்தை எடுக்கிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இணைப்பு பற்றி கூறப்படும் தகவல் அனைத்தும் பச்சை பொய். எங்கள் தரப்பில் இருப்பதுதான் உண்மையான அதிமுக. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. அதிமுக பிரிந்துள்ளது என்ற வார்த்தைக்கே இடமில்லை. 


ஆட்சி காலத்தின்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தது. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. அதிக உறுப்பினர் கொண்ட கட்சி அதிமுக. வெறும் மழைதான் பேஞ்சிருக்கு இன்னும் புயலே வரல அதுக்குள்ள அலறுறாங்க... மழையே பெய்யவில்லை அதனால் வெள்ளம் தேங்கவில்லை. மக்கள் புரிந்து கொள்வதற்காகவே வெள்ளை அறிக்கை கேட்கிறோம். விளக்கத்தை தெளிவுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. பல புயல்களை பார்த்த அரசு அ.தி.மு.க. அரசு... எங்களை பற்றி பேச எவருக்கும் தகுதியில்லை. தூய்மை பணியாளர்களுக்கு சிறந்த உதவி செய்தது அதிமுக அரசு தான். அவர்களுக்கு வெறும் டீ வாங்கி கொடுத்துட்டா போதுமா..?” எனக் கேள்வி எழுப்பினார்.