"ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும்" - ஈபிஎஸ் கண்டனம்!!

 
EPS

ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரிகளில் முறைகேடாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமவளம் கடத்தப்பட்டுள்ளது கண்டறிந்து, இந்த கடத்தலில் ஈடுபட்ட ஆளும் திமுகவினருக்கு சுமார் 20 கோடி ரூபாய் அபராதம் விதித்த, சப்-கலெக்டர் லாரிகளை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் ,கடத்தல் கும்பலின் செல்வாக்கால் மாவட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் அழுத்தத்தினால், கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

eps

 நெல்லை மாவட்டம் ராதாபுரம் கூடங்குளம் மற்றும் இருக்கன்குடி பகுதிகளில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன.  இதில் திமுக பிரமுகருக்கு சொந்தமான குவாரிகளில் புவியியல் துறையில் இழப்பீட்டு அளவை விட அதிக அளவு கனிமங்கள் வெட்டி கடத்தப்படுவதாக அரசு துறைகளுக்கு புகார் வந்தனர்.  பொதுமக்கள் அளித்த புகாரின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு கடத்திய லாரிகளை  பறிமுதல் செய்ததோடு,  பினாமி பெயர்களில் நடத்தும் குவாரிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்து உள்ளதாகவும், ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்தன. இதன் காரணமாக சப்-கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.



அடுத்த நிகழ்வாக ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் ஆளும் கட்சி பிரமுகர்களும் , திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர்களும் செய்யாத பணிகளுக்கு போலியாக பில்கள் தயாரிக்கச் சொல்லி , தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர் என்றும்,  இதனால் கடந்த 8ஆம் தேதி ஏற்பட்ட மன உளைச்சல்  காரணமாக சந்தோஷ் குமார் காவல்கிணறு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும்,  ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் ,செய்திகள் வந்துள்ளன.  உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும்,  அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் , இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ,அரசு அலுவலர் சங்கங்கள் திருநெல்வேலியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

stalin

அதேபோல ஆளும் கட்சியினருடைய அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம்,  இந்திய வனப் பணி அதிகாரியின்  மர்ம மரணத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க கூறியிருந்தேன்.  இதுபோல் தமிழ்நாடு முழுவதும் இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து,  அதிகாரிகள் மிரட்டுவதாகவும் தைரியமாக ஒரு சிலர் அளித்த புகாரின்  மீது  அல்லது நடைபெற்ற சம்பவங்கள் மீது அரசு இதுவரை எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்றும்,  பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.  இதனால் தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளும், ஒருவித அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் மர்ம மரணத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் , தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் திமுகவினரின் கொள்ளளவை தடுக்க முயன்ற அதிகாரிகள் பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  அதிமுக ஆட்சியின்போது அதிகாரிகள் எப்படி அச்ச உணர்வு இன்றி நேர்மையாக மக்கள் பணியாற்றினார்கள்.  அதே போல இப்போதும் அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்றவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும்,  அதிகாரிகளை மிரட்டி அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.