“வலிமையான கூட்டணி அமைத்ததால் அவதூறு பிரச்சாரம் பரப்பி வருகிறார்கள்”- ஈபிஎஸ்

 
ச் ச்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரம் மேற்கொண்டார். 

Image


அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மாரத்தான் ஓடும் திமுக அமைச்சர் அவர் துறையை பார்க்காமல் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார். கோரிக்கை வைக்கும் புளி விவசாயம் செய்யும் விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார். யார் அந்த சார்? என அதிமுக ஆட்சி அமைந்ததும் கண்டுபிடிக்கப்படும். அந்த சாருக்கு புளியிலிருந்து புளியங்கொட்டையை எப்படி எடுக்க வேண்டும் என்ற விவரத்தை சொல்கிறேன்.  மா.சுப்ரமணியம் அவரக்ளே உங்கள் துறையில் நிறைய தவறுகள் நடக்கின்றன. பணம், நகை திருடுவார்கள், எங்கேயாவது கிட்னி திருடுவார்களா?  நான் , வானதி, வேலுமணி எல்லோரும் இன்றுவரை விவசாயம்தான் செய்கிறோம். வலிமையான கூட்டணி அமைத்ததால் அவதூறு பிரசாரம் பரப்பிவருகிறார்கள். 200 தொகுதிகளில் வெல்வோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஸ்டாலினுக்கு அதிமுக தான் வெற்றிபெறும் என தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் வெள்ளத்தைப் பார்த்தால் தெரியும். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த பின், தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கையின்படி புதிய கிரிக்கெட் மைதானம் அமைத்து தரப்படும்.

எப்போதும் தொகுதி மக்கள் நலன் கருதியே என்னிடம் பேசுவார். நல்ல மனம், நல்ல குணம் படைத்தவர் எஸ்.பி.வேலுமணி. காரியத்தில் கண்ணாக இருப்பார். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த பின் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும்.  கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். ஒரு மகிழ்ச்சியான செய்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்பியும் மகாராஷ்ட்ரா ஆளுநராகவும் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன்  துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. தொண்டாமுத்தூர் என்றாலே ராசியான இடம் என்பதற்கு இதுவே சாட்சி. நாம் பேசி முடிக்கும்போது நல்ல செய்தி வந்திருக்கிறது, இதேபோல் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் ஆட்சி அமைப்போம்” என உறுதி அளித்தார்.