"பல அமைச்சர்களின் வீட்டு கதவை அமலாக்கத்துறை தட்டப்போகிறார்கள்"- எடப்பாடி பழனிசாமி
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் நிறைவாக திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே திறந்த வெளி பேருந்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்கு வந்த உடனே, இப்போது திமுக ஆட்சியில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஊழல் செய்தவர்கள் தண்டனை பெற்று சிறை செல்வது உறுதி. வலுவான கூட்டணி அமைந்து 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். தவறான ஆட்சியால் மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட திமுக, வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்கள். 2026இல் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், இப்போது திமுகவில் அமைச்சராக இருப்பவர்கள், அவர்களே கதவைத் திறந்து ஜெயிலுக்குப் போய்விடுவார்கள். தவறான ஆட்சியால் மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட திமுக, வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்கள். அதிமுக ஆட்சி அமையும்போது திமுக அரசின் 5 ஆண்டு ஊழல்களும் விசாரிக்கப்படும்.
திமுக செய்கிற பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம். மக்கள் மத்தியில் ஒரு மரியாதை உள்ளது. அதை திருமாவளவன் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதையே திருமாவளவன் பேசுகிறார்” என்றார்.


