“அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சாவடிக்கு 8 பேர் வீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்”- ஈபிஎஸ்

 
அச் அச்

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.


கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது, தேர்தல் பணிகள் குறித்து  எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை 118 தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கள ஆய்வு அடிப்படையில், பூத் கமிட்டி பணிகள், 2026 வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சாவடிக்கு 8 பேர் வீதம் பூத் கமிட்டி அமைத்து, பட்டியலை சமர்ப்பிக்க ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.