7.5% இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற சேலம் மாணவிக்கு வாழ்த்துகள்- ஈபிஎஸ்

 
ep

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 

அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு என 3 வகையான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய கலந்தாய்வு 20ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசையில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.  இதேபோல் தருமபுரியைச் சேர்ந்த பச்சையப்பன் 2வது இடம், காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

e

சேலம் மாணவிக்கு  ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2023 - 2024 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேருவதற்குத் தகுதி பெற்ற மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியலில், அம்மா அரசு கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவர் 7.5சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 569 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ள சேலம் மாணவி கிருத்திகாவிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்

இளநிலை மருத்துவக் கல்வியை தொடங்கவிருக்கும் வருங்கால மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.