பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்- ஈபிஎஸ்

 
EPS EPS

"டிட்வா" புயலின் காரணமாக கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெரிவித்துள்ளார்.

eps

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “"டிட்வா" புயலின் காரணமாக சென்னை,  கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.