நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எதையும் செய்யவில்லை- ஈபிஎஸ்
நீட் தேர்வினை ரத்து செய்ய ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்திடுவோம் என்ற சொன்ன முதல்வர் ஸ்டாலின் 41 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் அருகே குப்பதாசன்வளவு பகுதி மாணவி உயரை மாய்த்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வினை ரத்து செய்ய ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்திடுவோம் என்ற சொன்ன முதல்வர் ஸ்டாலின் 41 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுகவும், காங்கிரசும்தான். நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக இரட்ட் வேடம் போடுகிறது. திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்துவருகிறோம்.
மருத்துவ கனவு உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக தவறான முடிவை எடுக்காமல் இதர கோர்ஸ்களில் சேர்ந்து வாழ்வில் முன்னேறலாம். ஏழை,எளிய குடும்பத்தை சேர்ந்த அரசுபள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்ற தான் 7.5% உள்இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழ்நிலையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் அவரது குடும்பத்தையும் பெற்றோரையும் நினைத்து அவர்களது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.