கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? ஜெயக்குமார் கடும் தாக்கு!!

 
jayakumar

அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .

jayakumar

அதிமுக தொடங்கப்பட்டது 50வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது.  அதிமுக பொன் விழாவையொட்டி சென்னை தி நகரில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்ற சசிகலா அங்கு அதிமுக கொடியை ஏற்றினார்.   இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த கல்வெட்டில் அதிமுக பொதுசெயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து ராமாவரம் தோட்டத்திற்கு சென்ற அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதிமுக பொன்விழா மலரை வெளியிட்டார். இது ஓபிஎஸ் - ஈபிஎஸ் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

sasi

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது; ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார். வானத்தில் இருந்து குதித்து அவதாரம் எடுத்தது போல் புரட்சித்தாய் என்று சொல்லி கொள்கிறார் சசிகலா. என்ன புரட்சி செய்தார் சசிகலா? அவங்க குடும்பத்தை வாழ வைக்கிற புரட்சி மட்டுமே செய்தார்.  அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது" என்றார்.