பாஜகவிடம் சீட் கேட்கும் நிலை அதிமுகவிற்கு வந்தால் நாங்கள் இறந்தே போவோம்- செல்லூர் ராஜூ

 
அண்ணாமலை செல்லூர் ராஜூ

மதுரை சமயநல்லூரில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

 sellur raju

இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். இனிமேல் அதிமுக தலைமையேற்க விரும்பமாட்டோம் என அண்ணாமலை கூறுகிறார். உனக்கு என்ன தகுதி இருக்கிறது? பாஜகவிடம் சீட் கேட்டுப் பெறும் நிலை வந்தால் நாங்கள் செத்துப்போவோம். பாஜக தான் தலைமை ஏற்கவேண்டுமா! அண்ணாமலை பேசி பேசியே பாஜகவின் காவி கலரை மாற்றிவிடுவார்.

அதிமுகவின் ஆட்சி பொற்கால ஆட்சி 31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. இதில் கீழிருக்கும் தொண்டர்கள் கூட மேல் பதவிக்கு வரமுடியும். தொண்டர்களால் பொதுச்செயலாளர் பதவியில் உட்கார வைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலை பேசி பேசியே பாஜக மைனாரிட்டி கட்சி ஆகிவிட்டது” என  சாடினார்.