“விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு விடியாத ஆட்சியை தந்து விட்டார்கள்”- செல்லூர் ராஜூ

 
செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சி ஊழலை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மார்ச் 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

செல்லூர்

மதுரை மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் ஊழலை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மார்ச் 12 ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை காமராஜர் சாலை பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

பின்னர்செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ,"5 மாதங்களாக மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடத்தவில்லை. 69 திமுக உறுப்பினர்கள் இருந்தும் ஒரு மேயர் தேர்வு செய்ய முடியவில்லை.திருச்சியில் இன்று திமுக மாநாடு நடத்துவது குறித்த கேள்விக்கு, 20 லட்சம் பேர் கூட வருவதாக சொல்வார்கள், 50 ஆயிரம் பேர் வந்தாலும் லட்சம் பேர் வந்ததாக சொல்வார்கள். 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு விடியாத ஆட்சியை தந்து விட்டார்கள். சேர்த்து வைத்த பணத்தில் மக்களை கூட்டுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் வரும் 12ம் தேதி மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மக்களின் வரிப்பணத்தை உரையாடிய மாநகராட்சி கண்டித்து சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ஐந்து மாதமாக மேயர் , மண்டல தலைவர் நியமிக்கப்படவில்லை. மாதமாதம் நடைபெறும் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனால் மக்களின் குறைகளை தெரிவிக்க முடியவில்லை.ஐந்து மாதங்களாக இந்த மாநகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. 69 போன்ற உறுப்பினர்கள் இருந்தும் இதுவரை மேயர் மண்டல தலைவர் அறிவிக்கவில்லை. அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதிமுக கட்சியின் மதுரையின் நகர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது"என்றார்.