மூதாட்டியை தாக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ- வைரலாகும் வீடியோ

 
ச் ச்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

தாரமங்கலம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் இவர் தருமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மேச்சேரி அருகே உள்ள காமனேரியில் உள்ளது. தற்போது இவரது விவசாய நிலம் உள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அர்ஜுனன் மூலத்திற்கு அருகே உள்ள சரோஜா என்பவர் வீடு இருக்கிறது சாலை அமைக்க வந்த போது சரோஜா சாலை அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு அர்ஜுனன் விவசாய நிலம் உள்ள பகுதியில் சாலையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் அப்பெண்ணை கைகளால் தாக்கினார்.


இதில் காயமடைந்த அந்த பெண் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இன்று மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் சரோஜாவை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது