“அதிமுக போகிற போக்கே சரியில்லை”- திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் குற்றச்சாட்டு

 
as as

அதிமுகவின் செயல்பாடுகள், கட்சி அதிமுக போற போக்கே சரியில்லை என திமுகவில் இணைந்த புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் புதுக்கோட்டை அதிமுக மாவட்ட எம்ஜிஆர் அணி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளைய மன்னருமான வி.ஆர் கார்த்திக் தொண்டைமான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் முன்னிலையில் திமுக தன்னை இணைந்துக்கொண்டார். 2012 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் கார்த்தி தொண்டைமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

திமுகவில் தன்னை இணைந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் தொண்டைமான், “அதிமுகவினர் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அதிமுக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அக்கட்சியின் போற போக்கே சரியில்லை” என்றார். கடந்த ஜூலை 21 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அதிமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 16 நாட்கள் கழித்து தற்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.