ஒரு தகுதி வேண்டாமா? யாரை வேண்டுமானாலும் துணை முதல்வர் ஆக்குவதா?- உதயநிதியை சாடிய ஜெயக்குமார்

 
jayakumar

அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராமச்சந்திரா ஆதித்தனாரின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை. மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்? உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த நாகூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார். அராஜகம், அட்டூழியம், கள்ளச்சாராயம், அடாவடிதனம் செய்பவர்களே அமைச்சர் பதவிக்கு அடிப்படை தகுதியானவர்கள் என ஆகிவிட்டது. தா.மோ.அன்பரசன் கள்ளச்சாராயம் காய்ச்சுகிற குடும்பத்திடமிருந்து வந்தவர், அவர் அப்பா மீது பல வழக்குகள் உள்ளன. அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள்.  

தமிழ்நாடு பல பிரச்சினைகளால் தீப்பற்றி எரியும்போது ஃபார்முலா கார் ரேஸ் அவசியமா? எந்த விதத்திலும் இந்த பந்தயம் நடத்தக்கூடாது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது ,கஞ்சா போதை, விலை ஏற்றம், விலைவாசி ஏற்றம், மின்கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. புதிய பேருந்துகள் வாங்கலாம், மழைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மை உள்ளதால் யாரை வேண்டுமானாலும் துணை மந்திரி ஆக்கிக் கொள்ளலாம் மந்திரி என்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா? ” என்றார்.