சரியான குடிநீர் இன்றி 3 உயிர்கள் பறிபோய் உள்ளது! இதற்கு யார் பொறுப்பு?- ஜெயக்குமார்

 
jayakumar

சென்னை பல்லாவரம் பகுதியில்  30 பேர் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் திருவீதி, மோகன்ராஜ் ஆகிய  இருவர்  மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.  திருவீதி, மோகன்ராஜ் ஆகிய இருவரின் மரணத்திற்கும், மற்றவர்களின் உடல்நல பாதிப்புகளுக்கும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை எங்கள் கோட்டை என்று கொக்கரிக்கும் முதல்வரின் கவனத்திற்கு...குடிநீரை கூட முறையாக வழங்க முடியாமல் நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்திக் கொண்டு இந்த வசனமெல்லாம் அவசியமா?சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீரையே மக்கள் பயன்படுத்துகின்றனர்.

jayakumar

சரியான குடிநீர் இன்றி மூன்று உயிர்கள் பறிபோய் உள்ளது! இதற்கு யார் பொறுப்பு? மக்களுக்காக கேள்வி எழுப்பினால் கேலி செய்யும் அமைச்சர்களே, 'உதயநிதி உதய நாள்' விழாக்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். மக்களின் அடிப்படை வசதிகள் மீது கவனம் செலுத்துங்கள்!” என சாடியுள்ளார்.