இந்த ஆட்சிக்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என்ற எதேச்சாதிகார மனநிலை... ஜெயக்குமார் காட்டம்

 
jayakumar jayakumar

எத்தனை வழக்குகளை தொடுத்து எங்களை தடுத்து விட‌‌ முடியும்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், “எத்தனை வழக்குகளை தொடுத்து எங்களை தடுத்து விட‌‌ முடியும்? பொங்கல் பரிசு தொகுப்பில் ₹2500 ரூபாய் ரொக்க பரிசு இடம் பெறாததை குறிப்பிட்டு‌ பல‌ தனியார் இடங்களில்‌ வைத்த பதாகைகளை அவசரம்‌ அவசரமாக அகற்ற முயன்றுள்ளது காவல்துறை!

எந்த வகையிலும்-எந்த கேள்வியும் இந்த ஆட்சிக்கு எதிராக எழுப்ப  கூடாது என்ற எதேச்சாதிகார மனநிலை மன்னருக்கும் அவரது மகனுக்கும் உள்ளது. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி ஆட்சியில் அமர்ந்து மக்களை முட்டாளாக்கி கொண்டு இருப்பதும் எதிர்கட்சி-கூட்டணிக் கட்சி என எல்லா இயக்கங்களையும் முடக்கி கொண்டு இருப்பதெல்லாம் இன்னும் ஒரு வருடம்‌ தான்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.