கடன் வாங்கி செலவு செய்தாவது அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்- கே.பி.முனுசாமி

 
KP Munusamy KP Munusamy

கட்டுக்கோப்பாக கடமையை உணர்ந்து தேர்தல் பணியாற்ற தயாராக வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவுறுத்தியுள்ளார். 

தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை!" - கே.பி.முனுசாமி பேச்சு... | nakkheeran


சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய கே.பி.முனுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாரிசுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பங்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் கடுமையாக உழைத்தால், திமுக கூட்டணி கட்சியினர் நம்மை தொடர்பு கொள்ள தொடங்குவார்கள். 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 மாதமே உள்ளது, களத்தில் வெற்றி கனியை பறிக்க தயாராக வேண்டும். நிர்வாகிகளுக்கு பொருளாதார வசதி இல்லை என்றால், கடன் வாங்கியாவது அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். தொண்டர்கள் கட்டுக்கோப்பாக கடமையை உணர்ந்து தேர்தல் பணியாற்ற தயாராக வேண்டும்” என்றார்.