ஈபிஎஸ் சுற்றுப்பயணம் - இலச்சினை வெளியீடு
எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் 7.7.2025 முதல் 23.7.2025 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையம், 8ம் தேதி கோவை மாநகர், 10ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11ம் தேதி விழுப்புரம், 12ம் தேதி கடலூர், 14ம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி,15ம் தேதி பெரம்பலூர், அரியலூர், 16ம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18ம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர், 19ம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21ம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22ம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23ம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 5, 2025
இலச்சினை வெளியீடு!#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/IeScT1yw38
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 5, 2025
இலச்சினை வெளியீடு!#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/IeScT1yw38
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து திமுக அரசு நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகள் குறித்து விளக்குவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


