அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
May 29, 2025, 11:26 IST1748498197267
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பிக்கள், வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, அதிமுக MP சந்திரசேகரன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூன் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஜூன் 2 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கும் நிலையில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேதி அறிவிக்கப்பட்டு, திமுக நேற்று வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் போட்டியில் தற்போதைய நிலவரப்படி செம்மலை, ஜெயக்குமார்,
அன்வர் ராஜா, சதன்பிரபாகர், ராஜ்சத்தியன், நடிகை விந்தியா உள்ளிட்டோர் உள்ளனர்.


