அமித்ஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு தைரியம் இருக்கா?- தம்பிதுரை

 
தம்பிதுரை தம்பிதுரை

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக எம்.பி.தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

thambidurai

சென்னை கிண்டியில்  தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தம்பிதுரை எம்பி, “அமலாக்கத்துறை ஊழல் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கு தொடர தயாரா? 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா பாஜக கூட்டணியை அமைத்தார்கள். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்றார்கள். தமிழக மக்களின் உரிமை பறிக்கப்பட்ட போது நாங்கள் பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டோம். நாங்கள் வெளியே வந்தவுடன் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அப்போது கலைஞர் ஏற்படுத்திய கூட்டணி பொருந்தா கூட்டணியா என்பதை முதலமைச்சர் சொல்ல வேண்டும்.

எப்போதுமே சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது திமுகதான். திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி சரியான முடிவு எடுத்திருக்கிறார். அமித்ஷா தமிழக வந்தபோது பல உண்மைகளை சொல்லியுள்ளார்.  ஊழலை பற்றி அமித்ஷா சொன்னார். இது குறித்து ஏன் முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை?. அமித்ஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு தைரியம் இருக்கா? இஸ்லாமிய மக்களுக்கு எந்த விதமான இடையூர் வந்தாலும் அதிமுக அவர்கள் பக்கம் இருக்கும் கூட்டணி என்ற நிலைமை வந்தபோது கூட வக்ஃபு சட்டத்தை நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, அதனால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பது கிடையாது” என்றார்.