" தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவோம்" - ஓபிஎஸ்

 
ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

op

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி என்று சொல்லப்படும் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று விமர்சையாக கொண்டாடி விடுகிறோம்.  கிருஷ்ணர் அவதாரம் புராணங்களில் கூறப்படும் வகையில் கொடிய  அரக்கனான கம்சனை வதம் செய்வதற்காக தேவகி மற்றும் வசு தேவரின்  எட்டாவது மகனாக ஆவணி மாதத்தில் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் பிறந்து யாதவர் குலத்தில் மதுராவில் யசோதையின் மைந்தனாக வளர்ந்து வந்தார்.    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து, கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான வெண்ணைய் , அப்பம், பொறி ,அவல், வெல்லம், சீடை ,கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை படைத்து வணங்குவர்.


இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த நன்நாளை 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி வருகிறோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததன் நோக்கமே இந்த உலகத்தில் உள்ள தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். நாம் அனைவரும் தீமைகளை முறியடித்து உயரிய குறிக்கோளுடன் வாழ வேண்டும். தர்மம் தழைக்க வேண்டும்; ‘அமைதி, வளம், வளர்ச்சி' பெருக வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.