பிரிந்துள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும்- ஓபிஎஸ்

 
ops

பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மீண்டும் அதிமுக 2026 இல் ஆட்சியில் அமரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

op

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓபிஎஸ் அணி நகரச் செயலாளர் கோபிசங்கர் - ரேவதி இல்ல சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் மிகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வரிகட்டாமல் நேரடியாக மதுபானங்கள் டாஸ்மாக் கடைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது மோசமான செயல். பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மீண்டும் அதிமுக 2026 இல் ஆட்சியில் அமரும்” என்றார்.