செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்

 
s s

செங்கோட்டையனை உறுதியாக விரைவில் சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் தேனி பெரியகுளத்தில் செய்டியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு உறுதியாக ஆதரவு அளிக்கிறேன். செங்கோட்டையனை உறுதியாக விரைவில் சந்திப்பேன். 10 நாட்கள் அவகாசம் முடிந்த பின்னர் அனைவரையும் அழைத்து பேசுவேன். செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்கத்தக்கது அல்ல, கட்சி ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறினார் செங்கோட்டையன். பதவி பறிக்கப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். செங்கோட்டையன் கெடு விதித்ததில் தவறில்லை, ஈபிஎஸ்க்கு மக்கள் பாடம் புகட்டுவர்.” என்றார்.