அதிமுக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு!!

 
admk

களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக  சார்பில் இன்று நடைபெற இருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

tn
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான  ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் இன்று  மாலை 5.30 மணியளவில், சென்னை , டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

tn

இந்நிலையில் அதிமுக இஃப்தார் நோன்பு திறப்பு விழா இன்று நடக்கவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (27.4.2022) நடைபெற இருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நாளை (28.4.2022 - வியாழக் கிழமை) மாலை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரங்கில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.