'பெண்கள் முன்னேற்றமும், அதிமுக திட்டங்களும்..." - ஈபிஎஸ் - ஓபிஎஸ்-ன் மகளிர் தின வாழ்த்து!!

 
tn

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் , ஈபிஎஸ் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்ணின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் திங்கள் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த புண்ணிய நாளில் மகளிர் தின நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுக பெண்மையை போற்றி வணங்கி சிறப்பித்து பாதுகாத்திட உருவான இயக்கம் என்பது தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்று சிறப்புக்குரியனவாகும்.

eps ops

அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் பெண்ணுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும், என்பதற்காக அவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தாய்குலமே என அழைத்து பெண்கள் எல்லோருக்கும் தாயானவள் என்பதை தன் திரைப்படங்கள் மூலமும், அரசியல் பணிகள் மூலமும் அனைவர் மனதிலும் ஆழப் பதிய வைத்தவர் எம்ஜிஆர் . புரட்சித்தலைவி அம்மா தனது ஆட்சி காலத்தில் பெண்கள் வாழ்வு மேம்பட ஆற்றிய பணிகள் ஏராளம் . பெண் சிசுக் கொலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் ,நாட்டிலேயே முதல் முறையாக மகளிர் காவல்நிலையங்கள், பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப்பரிசு, தாலிக்கு தங்கம் ,மகப்பேறு நிதி உதவி ,பெண்களின் பணி சுமை எளிதாக மிக்ஸி, கிரைண்டர் ,இளம்பெண்களின் இன்னல் களைய விலையில்லா சானிடரி நாப்கின் என்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

ops eps

எங்கள் தலைமையிலான கழக அரசு பெண்களுக்கான மகளிர் உதவி திட்டத்தின் உதவி தொகை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. பணிக்கு செல்லும் பெண்களுக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கியது, மகப்பேறு விடுமுறை காலத்தை 9 மாதங்களாக உயர்த்தியது ,பெண்கள் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு அரசின் அனைத்துத் துறைகளிலும் முனைப்புடன் செயல்படுவதை அம்மா அரசு உறுதி செய்தது.  இன்னும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி சமூகத்தில்  பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல,  ஆற்றல் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி , பெண் எத்தனை உயரத்திற்குச் செல்ல முடியுமோ?  அத்தனை உயரத்தில் சென்று சீரும்,  சிறப்புமாக வாழ அதிமுக எந்நாளும்  உழைக்கும் என்று,  இந்த பொன்னாளில் உறுதி அளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.