"மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதம் ஆகிவிடும்" - விலைவாசி உயர்வு குறித்து ஓபிஎஸ் எச்சரிக்கை!!

 
ops mk stalin

விலைவாசியை மீட்டெடுக்க முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஏழு மாத கால திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது . இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால் மக்களின் வாங்கும் சக்தி குறைவதோடு தமிழ் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது தான் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

ops

இந்த நிலைமையில் இந்த ஆட்சி வர வேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கு வாக்களிக்காத மக்களையும் கவரக்கூடிய வகையில் என்னுடைய பணி இருக்கும். என்று வேறு தமிழக முதல்வர் அவர்கள் அடிக்கடி கூறி கூறி வருகிறார் . வாக்களித்த மக்களை அதிமுக கழகத்திற்கு வாக்களிக்காமல் திமுக விற்கு வாக்களிக்க விட்டோமே என்று , எண்ணி கொண்டிருக்கின்ற நிலையில் வாக்களித்த மக்களை கவர போவதாக தமிழக முதல்வர் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

ops

விடியலை நோக்கி என்ற பிரச்சாரத்தின் மூலம் திமுக ஆட்சியைப் பிடித்தது ஆனால் மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கவில்லை. மாறாக மக்கள் விரக்தியின் விளிம்பிற்கு தான் சென்றிருக்கிறார்கள். ஒருவேளை விடியலை நோக்கி என்ற பிரச்சாரம் திமுகவிற்கு விடிவுகாலம் கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தற்போது வலுவாக எழுந்துள்ளது. எது எப்படியோ கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பதற்கேற்ப திமுகவின் குட்டு வெளிப்பட்டு விட்டது. தாங்க முடியாத விலைவாசி உயர்வைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றேன் .தருணத்தில் விரக்தியில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில்,  தமிழக முதலமைச்சர் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் வள்ளுவரின் வாய்மொழியாம் அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதம் ஆகிவிடும் என்பதை நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.