அதிமுகவின் வெற்றியை தடுக்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை - ஓபிஎஸ்

 
ops stalin


தமிழகத்தில்  திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்  ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல்  பிரசாரம் அனல்பறக்க நடைபெற்று வருகிறது.

ops

இந்நிலையில் ராணிப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து  பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, 505 பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சி அமைத்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "வேட்பாளர்களின் முகத்தில் வெற்றிப் புன்னகை தெரிவதால் அதிமுக 100க்கு 100 மகத்தான வெற்றி பெறும். அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை " என்றும் கூறினார். 

ops mk stalin

முன்னதாக செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்லாவரம் ஈச்சங்காடு பகுதியில் பேசிய ஓபிஎஸ்,  தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியவில்லை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் புழுகு மூட்டைகள் ஸ்டாலின் மற்றும் திமுகவினர். முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார். சட்ட மசோதாவை நிறைவேற்றினார். ஆனால்  அதை நாங்கள் ஏற்கனவே செய்துவிட்டோம் . உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்ட அதிமுக வெற்றி பெறும். அதை ஜெயலலிதா ஆன்மாவிற்கு பரிசாக அளிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.