அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை
Jul 28, 2024, 10:46 IST1722143772351
புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலூர் அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நவநீதம் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பக்தா என்ற பத்மநாதன் (43) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கோயில் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அதிகாலை வீடு திரும்பியபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
2 சக்கர வாகனத்தில் வந்தபோது காரை மோதவிட்டு, கீழே விழுந்தவுடன் வெட்டிக்கொலை செய்டுவிட்டு கும்பல் தப்பியோடியது. கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன் விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.