எடப்பாடியாருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது- பொன்னையன்
வரும் தேர்தலில் மிக சிறப்பான கூட்டணியை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைப்பார். 2026ல் கூட்டணியே இல்லை என்றாலும் தனித்து நின்று ஆட்சி அமைப்போம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், “எடப்பாடியாருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது... டி.வி. மூலமாக உலகச் செய்திகளைப் பார்ப்பார். அளப்பரிய திறமை ஞாபக சக்தி... நெற்றிக்கண்ணில் இருந்து புள்ளி விவரம் தரும் அளவுக்கு அதீத ஞாபகசக்தி உடையவர் எடப்பாடி பழனிசாமி. 13 லட்சத்து 2,041 ரூபாய் என்று இருந்தாலும் அப்படியே சொல்வார். ராஜாஜியைவிட நினைவாற்றல் அதிகம் மிக்கவராக செயல்படுகிறார். வரும் தேர்தலில் மிக சிறப்பான கூட்டணியை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைப்பார். 2026ல் கூட்டணியே இல்லை என்றாலும் தனித்து நின்று ஆட்சி அமைப்போம்.
எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளூர் அரசியல், தேசிய அரசியல், உலக அரசியல் என எல்லா அரசியலும் தெரியும் என்றும் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தலைவர். அமித்சா கூறியபடி, தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்றால் அதற்கான தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது” என்றார்.