அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் டிச.17 தேதிக்கு ஒத்திவைப்பு - தலைமைக் கழகம் அறிவிப்பு....

 
இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது ஏன்? – அதிமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்!


திமுக அரசைக் கண்டித்து வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநிலம் தழுவிய அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்  டிசம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல்,  டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும்,  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்ட, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு அளித்தல் ,பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்குதல் , அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதை கண்டித்தும்,  அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்து இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தல்,  தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க தொகை வழங்க வலியுறுத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்… 6 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக!

முதலில் 9ம் தேதி (இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 11 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி அதிமுக  கண்டன ஆர்ப்பாட்டம் டிச 17 (வெள்ளிக்கிழமை) தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   

அதிமுக அறிக்கை